உள்நாட்டு செய்திகள்வணிகம்

அரசின் அலட்சியத்தினால் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு இன்று பூட்டு…



தீப்பெட்டிகளது உற்பத்திக்கு தேவையான மருந்துகள் இல்லாமையினால், இன்று(23) தீப்பெட்டித் தொழிற்சாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பான தீப்பெட்டிகள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தலையிட்டு இதற்குத் தேவையான மருந்துகளை சரியான முறையில் கொண்டு வராமைக் காரணமாகவே குறித்த இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தீப்பெட்டி மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டவுடன், அரசு மருந்துப் ​பொருட்களைக் கொண்டு வந்து தருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென்றும், இதனால் நாட்டில் தீப்பெட்டி பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியாதென்றும் குறித்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மேலும் 130 பேர் குணமடைந்தனர்

wpengine

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை

wpengine

ஜனாதிபதி பாரளுமன்றுக்கு

wpengine