உள்நாட்டு செய்திகள்

அரசாங்கம் தேசத் துரோகியாகியுள்ளது – கம்மன்பில



இலங்கையின் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதால் அரசாங்கம் தேசத் துரோக செயல்களில் ஈடுபடுகின்றது என பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பல்வேறு எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில், இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில், 30 பேர் விடுவிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் எதிர்வரும் காலங்களில், ஏனையவர்களும் விடுதலை செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை எதிர்க்கும் முகமாகவே, உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

எதிர்வரும் வருடம் முதல் வாகன இலக்கத் தகடுகள் டிஜிட்டல் முறையில்..

wpengine

“லக்செத செவன” வீடமைப்புத் தொகுதி மக்களிடம் கையளிப்பு…

wpengine

களனி பாலத்திற்கு இடையிலான பகுதி கால வரையின்றி பூட்டு…

wpengine