Top Story 1உள்நாட்டு செய்திகள்

அரசாங்கத்திலிருந்து விலகத் தயார் – லசந்த அழகியவண்ண

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவு ஒன்றை எடுத்தால், எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலக தமது அணியினர் தயாராக இருப்பதாக நுகர்வோர் விவகார ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கோ, சஜித் பிரேமதாசவிற்கு பின்னாலோ செல்ல மாட்டோம். அதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் செல்ல மாட்டோம்.

எனினும் தற்போது துரதிஷ்டவசமாக மக்கள் விடுதலை முன்னணி, சரத் பொன்சேகா, பொதுஜன பெரமுன போன்ற தரப்பினரின் விமர்சனங்களுக்கு கட்சி உள்ளாகியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகும் நிலைமைக்கு சென்றுள்ளது.

எவரது விமர்சனங்களுக்கு உள்ளாகும் தேவை எமக்கில்லை. அவற்றை நாங்கள் கவனத்திலும் கொள்வதில்லை. எமது கட்சிக்கு தனியான கொள்கை, நிலைப்பாடுகள் உள்ளன எனவும் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சஜித் – அநுர விவாதம் நாளை..!

wpengine

விசேட மூவரடங்கிய இரண்டாவது மேல்நீதிமன்ற நீதிபதிக் குழாம் அறிவிப்பு..

wpengine

ஆஸி’க்கான விமான சேவைகள் இரத்து

wpengine