உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசாங்கத்தின் தவறுகளால் அதிபர்களும் பலியாகின்றனர்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அரசாங்கம் ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கிய மதியநேர உணவுக்கான நிதியை கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை என்றும் அந்த நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதிபர்கள் கடைகளில் கடன்களைப் பெற்றிருந்தபோதும் இதுவரை அந்த நிதி வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்திலீசன் தெரிவித்தார்.

இன்றைய தினம்(12) திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக மதிய நேர உணவை நிறுத்துமாறு அறிவிக்காத நிலையில் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஐந்து ஆறு மாதங்களுக்கு மேலாக கடைகளிலே கடன்களைப் பெற்று உணவுகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

இதனால் அதிபர்கள் பல லட்சங்களை கடனாக பெற்று தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மனஅழுத்தங்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் உட்படுகின்றனர்.

Related posts

எனக்கும் தங்கக் கடத்தலுக்கும் எந்த சம்மந்தமுமில்லை, என்னைக் காப்பாற்றாத அரசுக்கு நான் ஏன் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்..?

wpengine

தேர்தல் வாக்களிப்புக்கான உத்தியோகபூர் வாக்குரிமை அட்டை ஜனவரி முதல்..

wpengine

போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்!

News Editor