உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சுப் பதவி தொடர்பில் விக்னேஸ்வரன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அமைச்சர் பதவி சம்பந்தமாக நான் அவ்வளவாக மனதில் எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது சம்பந்தமான சில கட்டமைப்புகளை அமைக்க உதவிகளை அரசாங்கத்திடம் இருந்து பெறவுள்ளேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் (C.V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சமகால நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சுப் பதவி எனக்குத் தேவையில்லை. அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டால் பெரிய பாதிப்பு எமக்கு ஏற்படும். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் போது கூட்டுப் பொறுப்புடைமை மற்றும் கடப்பாடு போன்றன இருக்கின்றது.

பெரும்பான்மை மக்களுக்கு ஏற்றவாறே செயற்பட பார்ப்பார்கள். இதன் காரணமாக அமைச்சரவை சம்பந்தமாக நான் அவ்வளவாக மனதில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது சம்பந்தமான சில கட்டமைப்புகளை அமைக்க உதவிகளை அரசாங்கத்திடம் இருந்து பெறவுள்ளேன். நான் வட மாகாண முதலமைச்சராக இருந்த போது முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க அனுமதி தரவில்லை.

இன்னமும் அதே போல இருக்காமல் வடகிழக்கில் சட்ட ரீதியான நிதியத்தை ஏற்படுத்தி வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெற்று அவற்றை நடைமுறைப்படுத்தும் செயற்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். ஆகவே தற்போது அமைச்சுப் பதவியை நான் பெரிதாக கருதவில்லை என்றார்.

Related posts

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 3721 பேர் விடுவிப்பு

wpengine

இஸ்ரேலில் ஓர் ஆண்டில் மூன்றாவது தேர்தல்

wpengine

இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ள பேரூந்து கட்டண விபரங்கள்…

wpengine