உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ஹகீமிற்கு எதிராக வலுப்பெறுகிறது விசாரணை



நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் அமைச்சர் ரவுப் ஹக்கீமினால் வழங்கப்பட்ட 500க்கும் அதிகமான சட்ட முரணான வேலை வாய்ப்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் குறித்த இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் சபையில் கடந்த வருடம் மாத்திரம் 500க்கும் அதிகமான தொழில்கள் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டுள்ளன.

குறித்த இந்த திணைக்களம் நீர்வள அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கீழ் வருகிறது.

எனவே இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டி இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

காலி கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்…

wpengine

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் $3.1 பில்லியன்

wpengine