உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் (யுனிடோ) பிராந்தியப் பிரதிநிதி சந்திப்பு


கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும்  புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் (யுனிடோ) பிராந்தியப் பிரதிநிதி ரெனே வான் பேக்கல் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் யுனிடோவின் இலங்கைக்கான பிரதிநிதி நவாஷ் ரஜாப்டின், அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் ஹிமாலி ஜினதாஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் கைத்தொழில் துறை வளர்ச்சிக்கென ஐக்கிய நாடுகள் சபை 9.2 இலக்கினைக் கொண்ட  கட்டமைப்பொன்றை செயற்படுத்தவிருப்பதாகவும் இதன் மூலம் கைத்தொழில் மறுசீரமைப்பை மேம்படுத்த உதவுள்ளதாகவும் ரெனே வான் பேக்கல் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம்  தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்ற காணிக்கான உறுதிப்பத்திரம் கையளிப்பு…

wpengine

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் மொத்தக் கடனையும் அரசு ஏற்கும் – பிரதமர்

wpengine

முதியோருக்கான கொடுப்பனவு இன்று

Azeem Kilabdeen