ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி இராஜினாமா… மஹிந்தவுடன் இணைவு…



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பழைய உறுப்பினரும், தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று(11) பிற்பகலில் சந்திப்பதற்கும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவருடன் சேர்த்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 07பேரும் மஹிந்த ராஜபக்சவுடன் இணைவதற்கான பேச்சுக்களை நடத்திவருவதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முதற்கட்டமாக இன்று(11) அல்லது எதிர்வரும் சில தினங்களில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

 

#rishma…

Related posts

உயிருக்கு உத்தரவாதம் இல்லையென நாமல் குமார தலைமறைவு…

wpengine

யோஷிதவின் கனவு நனவானது [PHOTOS]

wpengine

ரயிலுடன் மோதிய ஆட்டோ – இராணுவ சிப்பாய் உட்பட இருவர் பலி

wpengine