உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்காக 79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு..


அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்காக வரவு செலவு திட்டத்தில் 79 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சமன் ரத்னப் பிரிய தெரிவித்துள்ளார்.

நாடு எதிர் நோக்கியுள்ள பொருளாதார நிலையில் இவ்வாறானதொரு பாரிய தொகை வாகன கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை பொருத்தமானதல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் வருடத்துக்கான மின் மற்றும் எரிசக்கி அமைச்சின் புனரமைப்புக்காக 43 கோடி ரூபாவும் கிராமிய மட்டத்திலான அபிவிருத்திக்கு 34 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த திட்டமானது அவசியமற்றதென தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சமன் ரத்னப் பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் 27 அமைச்சர்களுக்கு இவ்வாறு புதிய வாகனங்கள் கொள்வனவு செய்ய பாராளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 1015 பேர் கைது

wpengine

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கை பயணம்

wpengine

அனுபவமற்ற வீரர்களே தோல்விக்கு காரணம் – மாலிங்க

wpengine