உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை முடிவை எதிர்த்து வைத்தியர்கள் மனு தாக்கல்..!

ஓய்வுபெறும் வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.

176 விஷேட வைத்தியர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை பரிசீலித்த சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு அடுத்த மாதம் 13 ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளது

60 வயதில் விஷேட வைத்தியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க வேண்டும் என கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி கூடிய அமைச்சர்கள் குழு முடிவு எடுத்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜகீர் கான்

wpengine

டயர் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

wpengine