உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை அறிக்கைகளை ஆராய சிறப்பு குழு..



அமைச்சரவை அறிக்கைகளை, அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு முன்னர், அது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றினை நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணி அரசு தீர்மானித்துள்ளது.

குறித்த குழுவானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பங்கேற்றலுடன் இடம்பெற இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாரத்திற்கு ஒரு முறை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களால் அமைச்சரவைப் பத்திரங்கள் முன்வைக்கப்படுவதோடு, அதன்போது இடம்பெறும் அசௌகரியங்களை குறைக்கவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி குறித்த அமைச்சரவைக் குழுவானது இன்று(01) மாலை 03.00 மணிக்கு முதல் தடவையாக கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

wpengine

இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine

தாஜூடின் கொலை – அனுர, சுமித்திற்கு தொடக்கம் முதல் தொடர்பு உண்டா என விசாரணைகள் ஆரம்பம்

wpengine