ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சரவையில் 06 வெற்றிடங்கள் – தேசிய அரசில் மொத்தமாக 16 பதவிகளுக்கு வெற்றிடம்…



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலககுவதால், அமைச்சரவை பதவிகள் 06, இராஜாங்க மற்றும் துணை இராஜாங்க அமைச்சர்கள் 09 பேரும் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய பதவிகளில் வெற்றிடம் நிலவியுள்ளது.

அதன்படி, விலகிய அமைச்சரவை அமைச்சர்கள்

தயாசிறி ஜயசேகர – விளையாட்டுத்துறை
ஜோன் செனவிரத்ன – தொழிலாளர் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி
சுசில் பிரேமஜயந்த – விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம்
அநுர பிரியதர்ஷன யாபா – அனர்த்த முகாமைத்துவம்
எஸ்.பீ.திசாநாயக்க – சமூர்த்தி அபிவிருத்தி
சந்திம வீரக்கொடி -திறன்கள் மற்றும் தொழிற்பயிற்சி

திலங்க சுமதிபால – துணை சபாநாயகர்.

இராஜாங்க அமைச்சர் – டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாபா அபேவர்தன, சுதர்ஷனி ப்ரனாந்துபுள்ளே, டி.பீ.ஏகநாயக்க

துணை இராஜங்க அமைச்சர்கள் – சுமேதா ஜீ ஜயசேன, தாரானாத் பஸ்நாயக, சுசந்த புஞ்சி நிலமே, அனுராத ஜயரத்ன, லக்ஷ்மன் வசந்த

 

 

rizmira

Related posts

நல்லாட்சியிடமிருந்து அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக 20% கொடுப்பனவு…

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் அழைப்பினை மறுத்தது மைத்திரி

wpengine

பெண் பணியாளர்களுக்கான பிரசவ விடுமுறையை இரட்டிப்பாக்க அரசு தீர்மானம்…

wpengine