ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்! பசில் – கோத்தபாய வாக்களித்தார்களா?



முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகிய இருவரும் அமெரிக்கா மற்றும் இலங்கையில் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தார்களா என்பது தொடர்பில் இன்னமும் உறுதியாகவில்லை.

கடந்த அரசாங்கத்தின் போது இலங்கை அரசியலில் மிகவும் முக்கிஸ்தர்களாக செயற்பட்ட அவர்கள், அமெரிக்கா தேர்தலில் தங்கள் வாக்குகளை பயன்படுத்த தவறியிருக்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நெருக்கமானவர்களின் கருத்தாக காணப்படுகின்றது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ச செயற்படுவதற்கு முன்னர் அமெரிக்க எரிபொருள் நிரம்பும் நிலையம் ஒன்றின் செயற்பாட்டாளராக பணியாற்றி அமெரிக்க எரிபொருள் துறையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்துள்ள ஒருவராவார்.

இதேவேளை இராணுவத்தில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்ச உணவு தயாரிக்கும் உதவியாளராக செயற்பட்டு அந்த நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மொடல் உள்ளாடை

wpengine

கலகொடஅத்தே ஞானசார தேரரை சந்திக்க CID மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு..

wpengine

மனமுடைந்த ASP லியனகே தனது தூதுவர் பதவியை இராஜினாமா செய்தார்…

wpengine