உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் நாளை பதவியேற்பு..



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் 45-வது ஜனாதிபதியாக நாளை(20) பதவி ஏற்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்டு டிரம்ப் (வயது 70) வெற்றி பெற்றார். அவர் வாஷிங்டனில் நாளை (20-ம் திகதி) நடக்க உள்ள பிரமாண்ட விழாவில் அந்நாட்டின் 45-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் பதவி ஏற்கும்போது இரண்டு பைபிள்களை பயன்படுத்துகிறார். ஒன்று, முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்தியது. மற்றொன்று, டிரம்ப் தனது குழந்தைப் பருவத்தில் பயன்படுத்தியது. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கிற விழா, ‘மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்’ என்ற பொருளில் கொண்டாடப்படுகிறது.

டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பதவி விலகிச் செல்கிற ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார்.

Related posts

ஹார்வே புயல் டெக்சாஸ் மாகாணத்தில் 82 பேர் உயிரிழப்பு..

wpengine

சீனாவுக்கு பயந்த ‘OMICRON’

wpengine

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைக்க சீனா முடிவு…

wpengine