உலக செய்திகள்

அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு – வாலிபர் கைது…



அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு 5 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை பொலிசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் உள்ள அன்னாபோலீஸ் நகரில் உள்ள பத்திரிகை அலுவலகத்தில் ஒரு மர்ம வாலிபர் ஒருவர் நுழைந்த தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணாடி கதவு வழியாக சரமாரியாக சுட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் கூறியுள்ளார்.

Related posts

இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம்…

wpengine

வெளியேறத் தயாராகும் டிரம்ப்

wpengine