உள்நாட்டு செய்திகள்

அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் – டொனால்ட் ட்ரம்ப்



(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் தலைதூக்குவதை தடுக்க அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சமுத்திர மற்றும் தேச எல்லை பாதுகாப்பு என்பனவற்றுக்கு இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.

ஜனநாயகம், சட்டவாட்சி, மனித உரிமைகள் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக இருதரப்பு உறவுகளை வலுவூட்டுவதன் அவசியத்தை அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள டொட்னி பெரேரா அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து நேற்று நற்சான்று பத்திரத்தை கையளித்தார்.

இந்த நிகழ்வின் போது இருதரப்பு உறவுகள் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டார்.

Related posts

நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.ஆர்.ஆடிகல…

wpengine

ரயில்வே தொழிற்சங்கங்கள் சில 26ம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்..

wpengine

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல நீதிமன்ற அனுமதி…

wpengine