உலக செய்திகள்

அமெரிக்காவுடன் போருக்கும் தயாராகவே உள்ளேன் – வட கொரிய அதிபர்



அமெரிக்காவின் எவ்வித நெருக்கடிக்கும் தமது நாடு ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை எனவும், தேவைப்பட்டால் போருக்கும் தயாரென வட கொரிய அதிபர் சூளுரைத்துள்ளார்.
வட கொரியாவின் 70-வது தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அந்நாட்டு அதிபரும் உயரிய தலைவருமான கிம் ஜாங் உன்,

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக இனி கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட அணிவகுப்பில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

இன்னும், வட கொரியாவின் ராணுவ பலத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் விதமாக வகை வகையான Missiles and Drones இந்த அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

கருப்பு உடையணிந்து ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்ட அதிபர் கிம் ஜாங் உன் பின்னர் தமது படையினருக்கு கை அசைத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறப்புரையாற்றிய அதிபர் கிம் ஜாங், தங்களது புரட்சிப்படை அமெரிக்காவின் எவ்வித அச்சுறுத்தலையும் முறியடிக்க போதுமான சக்தியுடன் விளங்குவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் உலகத்தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்றாலும், சீனாவின் மூத்த அரசியல்வாதியான லியு யூன்சன் பங்கேற்றுள்ளார்.

(riz)

Related posts

சீனாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடத்தில் அதிகரிக்கும் சாத்தியம்…

wpengine

அண்டார்டிக்கா பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் பைடன்

wpengine