உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை..



எங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார் என வடகொரியா வெளியுறவு துறை அமைச்சர் ரி யாங் ஹூ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகள், உலக நாடுகளின் கடும் கண்டனங்கள் என எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி வருகிறது.

தாக்குதல் நடத்தும் முனைப்புடன் நாட்டுக்குள் நுழையும் அமெரிக்கா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்று வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியூயார்க்கில் செய்தியாளர்களை சந்தித்த வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ, தங்களுக்கு எதிரான போரை முதலில் அமெரிக்கா தான் அறிவித்ததாக குற்றம் சாட்டினார்.

எனவே அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வடகொரியா தயங்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார். வடகொரியாவின் வான் எல்லையில் மட்டுமல்ல, எல்லைக்கு வெளியே பறக்கும் போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்த தங்களுக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

உலகம் முழுவதும் உயரும் பலி எண்ணிக்கை

wpengine

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு..

wpengine

யூடியூப் மூலம் வருமானம் ஈட்டும் ஸ்மார்ட் இந்திய கிராமம்: ஒரே கிராமத்தில் 40 சேனல்கள்

wpengine