உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

அமெரிக்காவுக்கு தலையிடியாய் ரஷ்யா



ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த நாடகாக மாறியுள்ள சிரியாவில், அமெரிக்க ராணுவத்தின் ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அங்கு ஏற்பட்டுள்ள கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ராணுவப் படை சிரிய அதிபரின் படைக்கு ஆதரவாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலை, அமெரிக்காவுடனான கூட்டுப் படையுடன் இணைந்து செய்யாமல், தனித்து செய்வதினால், அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், ரஷ்யா ராணுவ உதவிக்காக நன்றி தெரிவிக்க, சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத், ரஷ்யா சென்றுள்ளதும், அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்த சம்பவமும், அமெரிக்காவை மேலும் கடுப்பாக்கியுள்ளது.

சிரியா அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் எரிக் ஷுல்ட்ஸ் கருத்து தெரிவிக்கையில், “தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியவர் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத். அவருக்கு ரஷியா சிவப்பு கம்பள வரவேற்பு அளித்திருப்பது கண்டனத்துக்கு உரியது” என கூறினார்.

 

Related posts

இலங்கையில் இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை..!

wpengine

UPDATE- தயாசிறி ஜெயசேகரவுக்கு துணை அமைச்சரவைப் பேச்சாளர் பதவி..

wpengine

உத்தராகண்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

wpengine