கேளிக்கை

அமெரிக்காவில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆரம்பம்…



அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று(27) தொடங்கியது.

89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது. தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில் மூன்லைட், லா லா லேண்டு, ஹேக்சா ட்ஜ், லயன் போன்ற படங்கள் பல பிரிவுகளில் பரிந்துரைப் பட்டியலில் இருக்கின்றன. ஆஸ்கர் விழாவில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறந்த ஆஸ்கர் துணை நடிகர் விருது மஹேசர்லா அலிக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை கொலின் அட்வுட் பெற்றுக் கொண்டார். சிறந்த ஒப்பனைக்கான விருது சூசைடு ஸ்வாடு படம் வென்றது.

சிறந்த ஆவணப் படம் விருதை ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா படம் வென்றது. சிறந்த ஒப்பனை, சிகையலங்கார விருதை சூசைடு ஸ்குவாடு படம் வென்றது.

Related posts

மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்…

wpengine

வெளியானது “பேட்ட” படத்தின் டீசர்…

wpengine

‘மாயவன்’ இரண்டாம் பாகம் வருகிறது

wpengine