உலக செய்திகள்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக டிரம்ப் இனது பிரசாரங்கள் ஆரம்பம்



(FASTNEWS | COLOMBO) – அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், அதற்கான பிரசாரத்தை முறைப்படி தொடங்கி உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

டிரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2-வது முறையாக தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மியன்மாரில் ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 114 பேர் சுட்டுக் கொலை

wpengine

ஐ.எஸ். தீவிரவாத இயக்க நிறுவனராக ஹிலாரி கிளிண்டன் – டிரம்ப்

wpengine

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்…

wpengine