உலக செய்திகள்

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் துப்பாக்கி சூடு – 11 பேர் உயிரிழப்பு…


அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிசார் நடத்திய பதிலடி தாக்குதலில் காயமடைந்த மர்ம நபர், பொலிசாரிடம் சரணடைந்தார். 11 பேரை கொலை செய்தது, போலீசாரை துப்பாக்கியால் தாக்கியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பிட்ஸ்பர்க் பகுதிக்கு சென்று பார்வையிட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

Related posts

தாய்லாந்து துப்பாக்கி சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் சுட்டுக் கொலை

wpengine

ஹமாஸ் குறித்து ஐநா தீர்மானம் எதனையும் குறிப்பிடவில்லை – வாக்கெடுப்பை தவிர்த்தது அவுஸ்திரேலியா..!

wpengine

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து

wpengine