உள்நாட்டு செய்திகள்

அமித் வீரசிங்க உட்பட முக்கிய சந்தேக நபர்கள் 10 பேரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில்…



கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரையும் இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணதிலக தெரிவித்துள்ளார்.

அதன்படி அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 சந்தேகநபர்களை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்திற்கும் சுரேந்திர சூரவீர உள்ளிட்ட 2 சந்தேகநபர்களை கலகெதர நீதவான் நீதிமன்றத்திற்கும் இன்று(17) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உட்பட 10 பேர் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

-Rizma

Related posts

முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி!

Azeem Kilabdeen

புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

wpengine