உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபய முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அளுத்கமகே தெரிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முஸ்லிம் இன ஜனாதிபதி சட்டத்தரணிகள் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு.

பிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஸ முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை வெகுவாக எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முஸ்லிம் இன ஜனாதிபதி சட்டத்தரணிகள் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எம்பி ஆக பசில் பதவியேற்றார்

wpengine

சைக்கிள் ஓட்டியவருக்கு 25,000 /- தண்டப்பணம் விதிப்பு!

Azeem Kilabdeen

DIG நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை பெற்றுக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு…

wpengine