Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் கலைக்கப்படும்..!

இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  போது மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலத்தினுள் கலைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் திகதியை ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிப்போம் என தேர்தல் ஆணைக்குழு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

wpengine

கோட்டா பங்கேற்பு விழாவில் ரணிலுக்கும் அழைப்பு

wpengine

இன்னாள் ஜனாதிபதிக்கு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் அரசியல் முதிர்ச்சி இல்லை – ராவய பத்திரிகை

wpengine