உள்நாட்டு செய்திகள்

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு..



றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இம்மாதம் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடினின் கொலைச் சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காக, அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டார்.

குறித்த வழக்கு இன்று(18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,கொழும்பு மேலதிக நீதவான் குறித்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடின் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

அஸ்வேசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்

Azeem Kilabdeen

மஹிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி

wpengine

JASTECA முன்னாள் தலைவரான மஹிந்த சரணபால கௌரவிப்பு

wpengine