உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அநுர மக்களுக்கு பிழையான கருத்துக்களையே கூறுகிறார் – சம்பிக்க



ஜே.வி.பி தலைவரான அநுர மக்களை ஏமாற்றுகின்றார் என மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றுகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

கடந்த 5ம் திகதி நாடாளுமன்றில் குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.இந்தப் பிரேரணையில் 55 மில்லியன் ரூபா என எழுத்திலும் இலக்கத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது. கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது பற்றி தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் ஜே.வி.பி தலைவர் எந்தவிதமான தகவல்களையும் அரசாங்கம் வழங்கவில்லை என பொய்யுரைத்து மக்களை பிழையாக வழிநடத்துகின்றார் என சம்பிக்க மேலும், குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் ; நாணய நிதியம் கவலை வெளியிடுட்டுள்ளதாக மஹிந்தானந்த தெரிவிப்பு..!

wpengine

மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் தேர்தல் செயலகத்திற்கு கிடைக்கவில்லை

wpengine

பிரதமரின் சர்வதேச மனித உரிமைகள் தின செய்தி

wpengine