உள்நாட்டு செய்திகள்

அநுராதபுரம் மற்றும் மிகிந்தலையில் உள்ள 13 பாடசாலைகள் மூடப்படுகின்றது



அநுராதபுரம் மற்றும் மிகிந்தலையில் உள்ள 13 பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை மூடப்படும் என வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொஷன் உற்சவத்துக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக வருகை தரவுள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கான தங்குமிடங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இந்த பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

அதன் காரணமாக குறித்த பாசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மத்திய வித்தியாலயம், அநுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் வித்தியாலயம், புனித ஜோசப் வித்தியாலயம்,  விவேகானந்த மகா வித்தியாலயம், வலிசிங்ஹ ஹிரிச்சந்திர மகா வித்தியாலயம், நிவந்தக்க சேத்திய வித்தியாலயம், மகா போதி வித்தியாலயம்,  தந்திரிமலை கொணவிமல மகா வித்தியாலயம், மிகிந்தலை மகா வித்தியாலயம், மிகிந்தலை கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் மிகிந்தலை கமலக்குளம் வித்தியாலயம் என்பனவே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

Related posts

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் கடமைகளை பொறுபேற்றார்…

wpengine

சைட்டம் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை…

wpengine

ஹம்தியின் ஜனாஸாவை அடக்குவதில் இழுபறியும், கெடுபிடிகளும் தொடருகிறது..!

wpengine