உள்நாட்டு செய்திகள்

அநாகரீகமாக நடந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை



அநாகரீகமாக நடந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் மற்றும் கெட்ட வார்த்தைகளை பிரயோகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர்  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த விடயம் குறித்து ஏற்கனவே கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது கட்சித்தலைவர்களின் பூரண இணக்கப்பாட்டுடன் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும்.

உன்னதமான நாடாளுமன்றை இழிவுபடுத்த எந்தவொருவருக்கும் இடமளிக்க முடியாது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதுடன், சிலர் அவைக்குள் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தனர்.

இந்த விடயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சினோபாம் அடுத்த வாரம் முதல்

wpengine

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தீர்மானமில்லை

wpengine

இரவு 8 மணிக்குள் ஆஜராகுமாறு ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் காலக்கெடு

News Editor