உள்நாட்டு செய்திகள்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது



(FASTNEWS|COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படை முகாம் வீரர்களால் சர்வதேச கடல் எல்லையில் இருந்து 03 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் வைத்திய பரிசோதனையின் பின்னர் யாழ். கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை கூறியுள்ளது.

Related posts

சற்று முன்னர் ரணில் பதவிப் பிரமாணம்!

wpengine

வடக்கையும் ஆக்கிரமித்த ஞானசார தேரர்

wpengine

கட்டுநாயக்க விமான நிலைய வௌியேறும் பகுதி பொது மக்களுக்காக திறப்பு

wpengine