உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதியில் பயணிக்கும் மற்றும் அரைச் சொகுசு பேரூந்துகளுக்கு கட்டண திருத்தம் இல்லை..


இன்று(20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ள 04 வீத பேரூந்து கட்டண திருத்தமானது அதிவேக வீதியில் பயணிக்கும் பேரூந்துகளுக்கு மற்றும் அரைச் சொகுசு பேரூந்துகளுக்கும் பொருந்தாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த பேரூந்து கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படமாட்டாது எனவும் அதன் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

டீசல் விலையானது அதிகரிக்கப்பட்டமையினை தொடர்ந்து பேரூந்து சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சரினால் குறித்த பேரூந்து கட்டணம் திருத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குகுலே கங்கையின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது..

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழக நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்…

wpengine

சைட்டம் விரோதிகளின் இரவு நேரப் பாரிய போராட்டம்..

wpengine