உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிக வெப்பம் கொண்ட காலநிலை – கொழும்பு தேசிய வைத்தியசாலை பொது மக்களிடம் அவசர வேண்டுகோள்..



நாட்டில் நிலவும் அதிக வெப்பம் கொண்ட காலநிலைமைக்கு ஈடுகொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அதிகளவில் நீர் பருகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சமிந்தி சமரகோன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிக வெப்பத்தின் காரணமாக உடம்பின் செயற்பாடுகள் பாரிய தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சலியுடன் கூடிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.

சூடான காலநிலை காணப்படும் வேளைகளில் வெளிப்பயணங்களில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பும் ஒருவர் தனது முகத்தை கழுவிக் கொள்ளுமாறும், இக்காலப் பகுதியில் வேகமாக பரவும் இன்புளுவென்சா, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்தும் டெங்கு காய்ச்சலிலிருந்தும் பாதுகாப்புப் பெறுமாறும் டாக்டர் சமிந்தி பொதுமக்களிடம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் அதிக நேரத்தை கழிப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

(rizmira)

Related posts

கூட்டமைப்பை சிதைக்க கூட்டு சதி, விக்னேஷுக்கு சந்தேகம் – மாவையும் சீறல்

wpengine

வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு திறந்துவைப்பு

wpengine

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் சென்னையிலும் முற்றுகை போராட்டம்..

wpengine