உலக செய்திகள்விசேட செய்தி

அதிக உயிர்களை காவுகொண்ட பாகிஸ்தான் குண்டுவெடிப்பு – 60 பேரளவு பலி



பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று(27) இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் லாகூரில் தென்மேற்கு பகுதியில் உள்ள குல்சான் – இ-இக்பால் பார்க் என்ற பகுதியில் சிறுவர் பூங்காவொன்றிலேயே நேற்று மாலை இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

குண்டுவெடிப்பு  நடைபெற்ற பூங்காவில் சிறார்கள், பெண்கள் உட்பட பலர் நிறைந்திருந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியுள்ளனர். இருப்பினும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று மேலும் அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் பொலிஸ் தரப்பில் இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் எனவும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஸ்பெய்னில் ஒரே நாளில் கொரோனாவால் 769 பேர் பலி

wpengine

ஏரியில் படகு கவிழ்ந்து 33 பேர் பலி

wpengine

ஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது தாக்குதல்

wpengine