வாழ்க்கை

அதிகளவு பாதாம் சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்தா?



பாதாம் நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியபங்கு வகிக்கின்றது அதன் சுவையும் நன்றாக தான் இருக்கும். பாதாமில் அதிகளவு விட்டமின் ஏ உள்ளது. பாதாமை மிக அதிகளவு சாப்பிட்டால், அது எதிர்மறை விளைவுகளை தரும். ஆம் பாதமை அதிகளவு சாப்பிட்டால் 5 எதிர்மறை விளைவுகள் உண்டாகும். அவை என்ன என்பதை பற்றி காணலாம்.

வயிற்றுப்போக்கு:
நீங்கள் அதிகளவு பாதாமை சாப்பிட்டால் உங்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிறு சரி இல்லாமல் போவது ஆகிய பிரச்சினைகள் உண்டாகும். இதற்கு காரணம், பாதாமில் உள்ள அதிகளவு நார்ச்சத்து தான். அதிகளவு நார்ச்சத்தை உங்களது உடல் எடுத்துக்கொள்ளாது. நீங்கள் அதிகளவு நார்ச்சத்து உள்ள பொருட்களை சாப்பிட்டால், அதிகளவு நீரையும் குடிக்க வேண்டியது அவசியம். அதற்கு நீங்கள் பாதாமை அதிக அளவு சாப்பிடாமல் இருப்பதே சிறந்ததாக இருக்கும்.

எடை அதிகரிப்பு:
பாதாமில் அதிகளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. 100 கிராம் பாதாம் உங்களுக்கு 50 கிராம் கொழுப்பை தருகிறது. ஆனால் அளவாக பாதாம் சாப்பிடுவது இருதயத்திற்கு மிகவும் நல்லது. அதிகமாக பாதாம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிச்செய்யும்

நச்சுத்தன்மை:
உப்பு மற்றும் காரம் சேர்க்கப்பட்டு சாப்பிடும் பாதாம்கள் நல்லது என்றாலும் கூட, அவற்றை நீங்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால், அது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கும். ஏனெனில் இதில் ஹைட்ரோசயனிக் அமிலம் உள்ளது. எனவே அதிகமாக சாப்பிடும் போது, இது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும், முக்கியமாக கர்ப்பமாக உள்ள பெண்கள் இதனை அதிகமாக சாப்பிட கூடாது.

எவ்வளவு சாப்பிடுவது நல்லது:
உணவுத்துறையின் ஆய்வின் படி ஒரு நாளைக்கு முக்கால் கப் பாதாம் அதாவது 40 கிராமிற்கு மேல் கண்டிப்பாக பாதாம் சாப்பிட கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சொக்லட் பர்பி (CHOCOLATE BARFI)..

wpengine

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால் நீங்களும் வைத்தியர் தான்… ட்ரை பண்ணுங்க…

wpengine

உருளைக்கிழங்கை அழகை பராமரிக்க பயன்படுத்தி பார்த்திருக்கீங்களா?

wpengine