கேளிக்கை

தம்பி படத்தில் இணைந்த அண்ணன்… (photos)



கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சூர்யா நடித்திருப்பதாக நேற்று நடைபெற்ற விழாவில் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா, பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்டது. அப்போது கார்த்தி பேசும்போது, இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சூசகமாக கூறியுள்ளார்.

Related image

Related image

Related posts

பிக்பாஸ் தொடர்பில் நகுலின் நிலைப்பாடு [VIDEO]

wpengine

வீதிகளில் நடந்தபடியே கைப்பேசி உபயோகித்தால் 21,000 ரூபா அபராதம்..

wpengine

‘பிளாக் பேந்தர்’ கண்ணை மூடினார்

wpengine