கேளிக்கை

அட்லீ உடன் இணையும் ஷாருக்கான்



(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – நடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார்.

2013ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ.

இயக்குனர் அட்லீ அடுத்ததாக பொலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அதன்பின் அந்தப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

சமீபத்தில் ஷாருக்கான் படத்திற்கான கதை விவாதத்தில் இயக்குனர் அட்லீ ஈடுபட்டிருக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

இதன் மூலம் ஷாருக்கான் – அட்லீ இணையும் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது உறுதியானது.

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஷாருக்கான் – அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

Related posts

மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா…

wpengine

பீட்டர் பாலுக்கு நெஞ்சு வலியாம்

wpengine

இலங்கை இயக்குனரின் இயக்கத்தில் தென்னிந்திய நடிகர்கள்

wpengine