உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையை தெற்காசியாவில் முதல்தர சுகாதார வைத்திய நிலையமாக மாற்றுவதற்கு பல ஏற்பாடுகள்



தெற்காசியாவில் முதல்தர சுகாதார வைத்திய நிலையமாக அம்பாறை, அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையை மாற்றுவதற்கு பல நடைமுறைகலை மேற்கொண்டு வருவதாக அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர்,  தெரிவித்தார். கடந்த ஒரு வருட காலத்துக்குள் வெளிநோயாளர் பிரிவில் 24,775 பேரும் நடமாடும் வைத்திய சேவையில் 11,100 பேரும் தொற்றா நோய் பிரிவில் 3,785 பேரும் தங்கி சிகிச்சை பெற்றவர்கள் 2,240 பேரும் இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார். அதுமாத்திரமல்லாமல், அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வெளி பிரதேசங்களிலிருந்து வரும் நோயாளிகளை தாமதப்படுத்தல் அவர்களுக்கான வைத்திய சேவையை மிகக் குறுகிய நேரத்தில் வழங்கி வைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் அதிகூடிய முதல்தர வைத்திய சேவைகளை வழங்கும் வைத்தியசாலையாகவும் உற்பத்தித்திறன் சான்றிதழ் பெறுவதற்கான முதல் நிலை பெற்ற வைத்தியசாலையாகவும் மாற்றியமைக்க முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கராபிட்டிய வைத்தியசாலையின் கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே பாய்ந்து நபரொருவர் தற்கொலை..

wpengine

உயிர்த்த ஞாயிறு இன்று; பேராயர் தலைமையில் திருப்பலி

wpengine

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் நால்வருக்கும் வலுவான பாதுகாப்பு

wpengine