ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அசின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்!



எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், அசின். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ‘கஜினி’ படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதன் மூலம் இந்தி பட உலகுக்கு போனார்.

அந்த ஒரு படத்திலேயே இந்தியில் பிரபலமானார். சல்மான்கான், அஜய்தேவ்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன், என பிரபல கதாநாயகர்களுடன் நடித்தார். இந்த நிலையில் அசினுக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளது. மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணக்கிறார். இது காதல் திருமணம் ஆகும்.

திருமணம் முடிவானதை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக அசின் நிறுத்தி வைத்துள்ளார். அவர் கடைசியாக நடித்த ‘ஆல் இஸ் வெல்’ என்ற இந்தி படம்2 மாதங்களுக்கு முன்பு வெளியானது. அசின் திருமண ஏற்பாடுகள் இப்போது தீவிரமாக நடக்கிறது. திருமண தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனாலும், டிசம்பர் மாதம் திருமணம் நடக்கலாம் என்று அசினுக்கு நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அசின், திருமணத்துக்கான நகைகள் மற்றும் உடைகளை தேர்வு செய்ய தயாராகி விட்டார். இதற்காக அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு தேவையானதை வாங்கிவிட்டு பிரான்ஸ், மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்கிறார். அங்கேயும் திருமணத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின் நாடு திரும்புகிறார்.

Related posts

கொரோனா வைரஸ் – 14 நாட்கள் தனிமைப்படுத்தபடவுள்ள கிரிக்கெட் வீரர்கள்

wpengine

மஹிந்த அரசியலில் இருந்து ஓய்வு?

wpengine

முதலிடம் பிடித்த நயன்தாரா

wpengine