Top Story 3உள்நாட்டு செய்திகள்

அசாத் சாலி விடுதலை 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றமற்றவராகக் கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, இன, மத சீர்குலைவை ஏற்படுத்தும், வன்மத்தை தூண்டும் வகையிலான கருத்தொன்றை வெளியிட்டதாகக் கூறி, பயங்கரவாத தடுப்புச் சடத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்க செய்யப்பட்ட வழக்கின் மனுதாரர் தரப்பு விசாரணைகள் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி நிறைவடைந்திருந்தன.

இந்நிலையில், இவ்வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியான அசாத் சாலியை நிரபராதியாகக் கருதி விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டார்.

Related posts

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாக் காலிஸ்

wpengine

நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்கள் 618 பேர்

wpengine

பல்கலை முரண்பாட்டு நிலைமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 05 பேர் அடங்கிய குழு…

wpengine