உள்நாட்டு செய்திகள்

அசாதாரண சூழ்நிலை குறித்து அரசு பொறுப்புக் கூற வேண்டும்…



நாட்டில் தற்போது இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

இன்று(09) காலை கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, சர்வ மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முஸ்லிம் மக்கள் தன்னிடம் வேண்டிக் கொண்டதால் தான் இந்த கலந்துரையாடலுக்கு வந்ததாகவும் ஒரு மத்தியஸ்தராகவே இங்கு செயல்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைதியுடனும், பொறுமையுடனும் அனைத்து மக்களும் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் தொடர்பில் இன்று விசேட சந்திப்பு…

wpengine

ஆரச்சிக்கட்டுவ – மய்யாவ நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலை – பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை…

wpengine

தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பாக அறிவிக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – பெப்ரல்..!

wpengine