உள்நாட்டு செய்திகள்

அங்குலான பதற்ற நிலை : 14 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அங்குலானை காவல் நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 10ம் திகதி மொரட்டுவை – லுனாவ பாலத்திற்கு அருகில் காவல்துறையினரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக காவல்துறை உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று(16) அங்குலானை காவல்நிலையத்திற்கு முன்பாக குழு ஒன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செயற்பட்டபோது பதற்ற நிலை ஏற்பட்டதுடன், காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு காவல்துறையினரால் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

wpengine

வட்டி விகிதத்தில் மாற்றம்

wpengine

2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளரை களமிறக்குமா..?

wpengine