உள்நாட்டு செய்திகள்

அங்குலான துப்பாக்கிச்சூடு : CID விசாரணை [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அங்குலானவில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள், குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலியா சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

+++++++++++++++++++++++++++++++++++   UPDATE

அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பதற்ற நிலை

அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அங்குலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர்கள் இருவர் இன்று காலை 5 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தின் முன்னால் இன்று பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது; இந்தத் தடை நீக்கப்பட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!

wpengine

தொடரினை வென்றது அவுஸ்திரேலிய அணி..

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் இன்று

wpengine