உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அகில மற்றும் மாலிங்க குறித்து மேத்யூஸ் இடமிருந்து 02 சான்றிதழ்கள்…


இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சய 18 வயதில் விளையாடுவதிலும், தற்போது விளையாடுவதிலும் பாரிய மாற்றங்கள் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணியுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அகில தனஞ்சயவின் மாற்றம் குறித்து ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“பாரியளவில் மாற்றம் உள்ளது, நான் நினைக்கிறேன் 18 வயதில் விளையாடியதை விட தற்போது மாற்றங்கள் நிறையவே உள்ளன, நான் நினைக்கிறேன் அவர் இப்போது மனநிலையினை ஒருமைப்படுத்தி பந்து வீசுகிறார், அவர் பந்து வீச பயப்படுவதில்லை, ஆதலால் அவரில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன”

மேலும் இன்று(14) இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 போட்டி குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“கட்டாயம் வெற்றி பெற முயற்சிக்கிறோம், கடந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றோம் அவ்வாறே இருபதுக்கு 20 போட்டிகளிலும் வெற்றி பெற எண்ணியுள்ளோம், எமக்கு சிறந்த அணியொன்றும் உள்ளது ,நான் நம்பிக்கை கொள்கிறேன் கட்டாயம் வெற்றியடைவோம்”

அவ்வாறே, லசித் மாலிங்க குறித்தும் வினவப்பட்டது;

“கட்டாயம் அவர் அணிக்காக பாரிய சேவையினை ஆற்றிய வீரர் ஆவார். லசித் மாலிங்க எனப்படுபவர் பல்வேறு கோணங்களில் பந்து வீச்சு குறித்து திட்டங்களை கொண்டவர், அவர் நிச்சயம் எமது எதிர்கால திட்டங்களில் உள்வாங்கப்பட்டுள்ளார் என்றே கூற வேண்டும்”

Related posts

9A சித்தி பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு..!

wpengine

பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன் இறக்குமதி…

wpengine

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று இடம்பெறாது…

wpengine