உலக செய்திகள்

அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து – 150 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகளின் படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லிபியா நாட்டின் அல் கோம்ஸ் நகரில் இருந்து படகு ஒன்றில் 300-க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பா நோக்கி பயணித்தனர். லிபியாவிலிருந்து 120 கி.மீ தொலைவில் மத்திய தரைகடல் பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர்.

இது குறித்து தகவலறிந்த லீபிய நாட்டு கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கடலில் சிக்கிய 150 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர்களது உடலை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

மாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 53 இராணுவ வீரர்கள் பலி

wpengine

கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது Johnson & Johnson

wpengine

கால் இல்லாது வாழ முடியாது… ஷசி இடம் ஜெயலலிதா கெஞ்சினாரா.. (PHOTOS)

wpengine