உலக செய்திகள்

ஃபுளோரன்ஸ் சூறாவளி – பெருமளவில் மக்கள் வெளியேற்றம்…


அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி வியாழக்கிழமை மாலை தாக்குவதற்குமுன்பு அந்த பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் உடனடியாக வெளியேறி வருகின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 120 மைல்கள் என உள்ளநிலையில், இந்த சூறாவளி ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரிவில் முன்பு இருந்ததைவிட மூன்றாம் பிரிவு என தரவரிசையில் இறக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி மிகவும் ஆபத்துமிக்கது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த சூறாவளியின் தாக்கம் அடுத்த 48 மணி நேரங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களை சேர்ந்த ஏறக்குறைய 17 லட்சம் மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தெரிவு

wpengine

ஈராக் போராட்டம் – ஐக்கிய நாடுகள் கண்டனம்

wpengine

எல் சால்வடார் நாட்டவர்களை 18 மாதங்களில் வெளியேற அமெரிக்கா உத்தரவு…b

wpengine